ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் ஆக தொடர்கிறது.

6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5 சதவீதமாக தொடர்கிறது என்றும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமே ரெப்போ எனப்படுகிறது.