ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பாஜகவின் பஜன்லால் சர்மா பதவி ஏற்று கொண்டார்.  தியாகுமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோர் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றனர். பஜன்லால் சர்மாவுக்கு ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.