இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே சமயம் சரிபார்ப்பு பணிகளுக்கும் ஆதார் கார்டு என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளின் போது ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில் அல்லது ஆதார் அட்டை தொலைந்து விட்டால் நம்முடைய மொபைல் எண்ணை வைத்து மட்டுமே இ ஆதார் எடுத்துக் கொள்ள முடியும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கு முதலில் நம்முடைய பதிவு ஐடியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு யுஐடிஏஐ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று ஆதார் அட்டை பதிவிறக்கம் தேவை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பெறப்பட்ட பதிவு ஐடி மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

பின்னர் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு ஓடிபி பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்களது ஆதார் பதிவு செய்வதற்கான விருப்பம் திரையில் தோன்றும்.

ஆதார் பதிவு விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.