கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மணாங்குப்பம் பகுதியில் நடந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது கேட் மூடப்படாமல் இருந்த நிலையில் பள்ளி வாகனம் அந்த வழியாக சென்றபோது ரயில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில் ஒரு மாணவனும் ஓட்டுனரும் காயத்தோடு உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தின் போது பள்ளி வாகன ஓட்டுனர் கட்டாயப்படுத்தி கேட்டை மூட வேண்டாம் என்று கூறியதால் தான் கேட்டை மூடாமல் விட்டதாக முதலில் ரயில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கூறினார். ஆனால் இதனை காயம் அடைந்த ஓட்டுனர் மற்றும் மாணவன் இருவரும் மறுத்த நிலையில் தற்போது உண்மை வெளிவந்துள்ளது.
அதாவது ரயில்வே கேட்டை மூடாமல் பிரைவேட் ஸ்டேஷன் எண்ணை ரயில்வே மாஸ்டருக்கு பங்கஜ் சர்மா அனுப்பியுள்ளார். இந்த விபத்துக்கு பிறகு ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என பங்கஜ் சர்மா கூறியது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டில் பதிவாகியுள்ளது. மேலும் இதனைக் கண்டு வைரலாகி வரும் நிலையில் ஏற்கனவே பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்ததோடு அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
