நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் ஆடு மாடுகளின் மாநாடு நடத்தினார். அப்போது நான் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்க்கும் வேலையை அரசு வேலையாகுவேன் என்றும் ஆடுகளுக்கும் ஓட்டுரிமை வழங்குவேன் என்றும் கூறினார். அதோடு வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இது பற்றி நேற்று செய்தி அவர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சீமான் ஆடு மாடுகளுக்கு முன்பாக பேசினார். அவரது நிலைமை இப்படி இருக்கும்போது என்பதை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது. அவர் மனிதனையே மனிதனாக நினைத்துப் பேச மாட்டார். மாக்களாக நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுவார். அதன் உச்சமாக தற்போது ஆடு மாடுகளுக்கு முன்னிலையில் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவரது உண்மை நிலையை பார்த்து தமிழக மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளார். இது அவரது கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். முதல் நாள் பேசியதை மறுநாள் மறுத்து பேசுகிறார். மேலும் அவரை மற்றொரு நாளில் வேறொரு கதையை திரித்து பேசுவார் என்று கூறினார்.