தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை, மாநிலத்தின் கடன் சுமை ரூ. 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “திமுகவின் தவறான நிதி மேலாண்மையையும் ஊழலையும் மட்டும் காரணம் காட்டிவிட்டு, ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்தும் தவெக அரசு நாட்களை நகர்த்த முடியாது” என்று சாடியுள்ளார். முந்தைய அரசின் குறைகளை மட்டுமே பேசி காலத்தை வீணடிக்காமல், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் திட்டமிடுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் காலத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக வெள்ளை அறிக்கையின் மூலம் அரசு உணர்த்துகிறதா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார். “தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறீர்கள் என்பதற்குத் தெளிவான விளக்கம் தேவை!” என்று எல். முருகன் தவெக அரசை நோக்கித் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.