ஹைதராபாத்தில் பேருந்து ஒன்று தவறான பாதையில் அதிவேகமாக வந்தபோது, தைரியமாக அதன் குறுக்கே நின்று பைக் ஓட்டுநர் ஒருவர் தடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தருணத்தை வேறொரு பயணி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

பேருந்து ஓட்டுநர் தவறான பாதையில் வந்ததோடு, அதைக் கேட்க வந்த பைக் ஓட்டுநர் மற்றும் இதர வாகன ஓட்டிகள் மீதும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இறுதியில், அந்த பேருந்து ஓட்டுநர் தனது வாகனத்தைப் பின்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

இந்த சம்பவம் குறித்துப் பதிவிட்ட நபர், அந்த ஓட்டுநர் சாலை விதிகளை மதிக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாகவும், பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஒன்றின் மீதும் அவர் மோதியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ள நிலையில், பைக் ஓட்டுநரின் துணிச்சலை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். “தவறான பாதையில் வரும் பேருந்து ஓட்டுநர்களுக்கு இது ஒரு சரியான பாடம்”, “இவரைப் போலப் பலர் சாலைகளில் தவறுகளைக் கண்டிக்க முன்வர வேண்டும்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Alex (@_travel_clickz_)

“>

மேலும், தென்னிந்தியாவில் இத்தகைய செயல்கள் சாத்தியமென்றும், சில வட மாநிலங்களில் இவ்வளவு தைரியமாகப் பேருந்து ஓட்டுநர்களை எதிர்ப்பது ஆபத்தானது என்றும் சிலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற போக்கு குறித்து இந்த வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.