ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ் ஆக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி பண்டிகை போனசாக வழங்குவதற்கு மத்திய  அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ரயில்வே துறையின் 11,07,346 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக 1,968.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்டோர் போனசால் பயன்பெறுவர்..