தீபாவளியை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான சம்பளத்தை போனஸாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுனர்கள், டிராக் பராமரிப்பாளர்கள், ரயில் கார்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், சூப்பர்வைசர்கள், டெக்னிஷியன்கள் மற்றும் குரூப் C ஊழியர்கள் போனஸ் பெற இருக்கின்றனர். கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.