நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. நேற்று முன்தினம்  லோக்சபாவில் நிறைவேறிய நிலையில் நேற்று ராஜ்யசபாவிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. ராஜ்ய சபாவில் இந்த மசோதாவுக்கு ஆதரவாகவே அனைவரும் வாக்களித்தனர். மேலும் ஒருவர் கூட ராஜ்யசபாவில் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.