மத்திய அரசானது நாட்டு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலனுக்கான விஸ்வகர்மா திட்டத்தினைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அரசு (வங்கி) எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும்.

அதன்படி, தொடக்கத்தில் 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என அரசு முடிவு செய்துள்ளது. அதைத் திருப்பிச் செலுத்தியவுடன், விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கடன் பெறும் நபர்கள்ளுக்கு அரசாங்கம் கூடுதலாக 2 லட்சம் ரூபாய் கடனாக வழங்கும். இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு இத்திட்டம் உதவி வழங்கும்.