தேசிய மருத்துவர் அறிவியல் தேர்வு வாரியம் ஒவ்வொரு வருடமும் மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான நீட் தேர்வு நடத்தி வருகின்றது. இந்த வருடம் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் NEET SS தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஜி 20 மாநாடு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக பதிவு எண்ணை உள்ளிட்டு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.