தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரவாக ஈடுபட்டு வரும் நிலையில் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் வட்டாரத்தில் சமீப காலமாக இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் சொந்த கட்சியை விட்டு விலகி மாற்றிக் கட்சியில் இணைவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் அலுவலகத்தில் நடிகர் விஜய் முன்னிலையில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்து கொண்டனர்.

குறிப்பாக திமுகவின் தஞ்சை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சி சுந்தரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த ஜெகதீச பாண்டியன், காமராஜரின் பேத்தி மயூரி, நடிகர் வேலராமு மூர்த்தியின் மகன் ராஜ்மோகன் உள்ளிட்டோறும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.

மேலும் 2026 தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகம் தயாராகி வரும் நிலையில் பொங்கலுக்கு முன்பாக இன்னும் பல தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறுவதால் அரசியல் வட்டாரத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.