தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

ஸ்டாலினின் பெயரில் சுமார் 3.30 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 4.34 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 1.32 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 90 சவரன் தங்க நகைகளும் இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் பெயரில் சொந்தமாக வாகனங்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு வெளியான இந்த அதிகாரப்பூர்வ சொத்து விவரங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.