மத்தியப் பிரதேச முதல்வராக பாஜக தலைவர் மோகன் யாதவ் போபாலில் பதவியேற்றார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவி ஏற்று கொண்டார். மேலும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வராக பாஜக தலைவர் ஜெகதீஷ் தேவ்டா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோர் போபாலில் பதவியேற்றனர். மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்யா சிந்தியா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் 11 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.