இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் எதிர்கால தேவைக்காக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக எஸ்பிஐ வங்கி, ஐடிபிஐ மற்றும் இந்தியன் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றது. இந்த வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்ட காலம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நிறைவடைவதால் அதற்குள் இது நிறைந்து நீங்கள் பயன் பெறுங்கள்.

எஸ்பிஐ வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் மக்களுக்கு 7.10 சதவீதம் வட்டி, மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. அதனைப் போலவே இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டி, மூத்த குடிமக்களுக்கு எட்டு சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஐடிபிஐ வங்கியில் பொதுமக்களுக்கு 7.25% வட்டி, மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகின்றது. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் இணைய விரும்பினால் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைந்து பயன் பெறுங்கள்.