சமையல் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது eKYC ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கான காலக்கெடு முடிவடையவிருந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி மேலும் 8 நாட்களுக்கு அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, கேஸ் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய நேரத்திற்குள் தங்களின் eKYC ஆவணங்களைச் சமர்ப்பித்து சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இச்செயல்முறையை நிறைவு செய்யத் தவறினால், கேஸ்  முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதுடன், அரசின் மானியத் தொகையும் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.