பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த வழக்கு விசாரணை தொடர்பாக சீமான் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சீமானுக்கு போலீசார் அனுப்பிய சம்மன் குறித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பெரியார் குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை, அவர் பேசியதை தான் கூறினேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன். அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன் என கூறியுள்ளார்.