தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தற்போது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று தகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீதமுள்ள 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களில் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய்க்கு எதிராக அந்த தொகுதியில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி திலகபாமா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.