தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியிலுள்ள பாமக கட்சிக்கு மொத்தம் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே மூன்று வேட்பாளர்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள தொகுதிகளுக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி தருமபுரி தொகுதியில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
அதன் பிறகு பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா களம் காண்கிறார். விருத்தாச்சலத்தில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை எதிர்த்து பாமக சார்பில் தமிழரசி ஆதிமூலம் போட்டியிடுகிறார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து பாமக சார்பில் அன்பு சோழன் களம் காண்கிறார். மேலும் பாமக கட்சியின் முழு வேட்பாளர்கள் பட்டியல் இதோ,

