தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து, பொதுமக்களின் கவனத்திற்கு முக்கியமான தகவலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று, வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நேரத்தை கவனத்தில் கொண்டு, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது

தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.