அம்மன் பாடல்களை பாடி பிரபலமானவர் சக்தி சண்முகராஜா. இவர் பாடி இசை அமைத்த மலையனூர் அங்காளியே, வேப்பிலை நாயகியே, ஆடி வாரா ஓடி வாரா போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவையாகும்.
அவரது பாடல்கள் பெரும்பாலும் ஆடி மாதங்களில் அனைவரது வீடுகளிலும் ஒலிக்கும். சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சக்தி சண்முகராஜா அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்திலேயே மறைந்துள்ளது பெரும் சோகம். மேலும் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
