ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற புஷ்கர் ஏரிக்கரையில், வழக்கத்திற்கு மாறாக ஒரு பாம்பு மிகவும் தவிப்போடும் அலை பாய்ந்தபடியும் இருந்ததைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பாம்பின் விசித்திரமான நடத்தையைக் கண்ட உள்ளூர் மக்கள், உடனடியாக விலங்கு நல அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், அந்தப் பாம்பைப் பிடித்து சோதித்துப் பார்த்தபோதுதான் அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.
राजस्थान के अजमेर स्थित पुष्कर सरोवर के किनारे उस समय लोगों की भीड़ जमा हो गई जब एक सांप असामान्य रूप से परेशान दिखाई दिया. स्थानीय लोगों ने तुरंत एनिमल केयर सोसायटी को सूचना दी, जिसके बाद टीम मौके पर पहुंची और रेस्क्यू ऑपरेशन शुरू किया.
मौके पर पहुंची एनिमल केयर सोसायटी की टीम… pic.twitter.com/qOcnvfTDqG
— AajTak (@aajtak) June 10, 2026
அந்தப் பாம்பின் உடலில் வெள்ளி மோதிரம் ஒன்று பலமாக மாட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மோதிரம் உடலை இறுக்கியதால் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாகவே, அந்தப் பாம்பு அங்கும் இங்கும் அலைந்து துடிதுடித்தது மீட்புக்குழுவினருக்குத் தெரியவந்தது. வழக்கமாகப் பாம்புகள் பிளாஸ்டிக் கழிவுகளிலோ அல்லது வலைகளிலோ சிக்குவதுதான் வழக்கம். ஆனால், ஒரு பாம்பின் உடலில் வெள்ளி மோதிரம் சிக்கியிருப்பது போன்ற ஒரு விசித்திரமான சம்பவத்தை தாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என மீட்புக்குழுவினர் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். பின்னர் அந்த மோதிரம் பத்திரமாக அகற்றப்பட்டு, பாம்பு காட்டில் விடப்பட்டது.
