மத்திய அரசு எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு கான்வாய் (Convoy) வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை குறைக்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்திலும் அமைச்சர்களின் கான்வாய் வாகனங்களை பாதியாகக் குறைப்பதோடு, வாரத்தில் ஒரு நாள் ‘வாகனங்கள் இல்லாத நாள்’ (No Vehicle Day) கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், அரசு நிர்வாகத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்த முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் ஆடம்பரக் குறைப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.