பாஜக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. பாமக கட்சியின் தலைவர் நான்தான் என்று அன்புமணி கூறி வரும் நிலையில் ராமதாஸ் தான்தான் தலைவர் என்றும் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியதோடு அவரை முன்னதாகவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். இந்த நிலையில் அன்பு மணி மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்களிடையே மோதல் போக்கு நிலவுகிறது.

சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொண்டதாக அவர்கள் தரப்பு அறிவித்த நிலையில் தற்போது ஜிகே மணி பரபரப்பு குற்றசாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். அதாவது ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக. அன்புமணி போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்துள்ளதால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அன்பு மணியோடு சேர்ந்து மோசடி செய்த தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து  டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.