பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிற்குத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அன்புமணி ராமதாஸ் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் மற்றும் சின்னம் தொடர்பான சட்டப் போராட்டம் பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து உரிய பதிலைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதில் மற்றும் அன்புமணியின் விளக்கத்தைப் பொறுத்தே பாமகவின் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
.
