அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், டெல்டா பகுதியின் மிக மூத்த அரசியல் தலைவருமான வெள்ளூர் வீராசாமி (88) இன்று காலமானார். 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர். 1984-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் உணவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து, மக்கள் போற்றும் வகையில் பணியாற்றியவர்.
இவரது மறைவு அதிமுக தொண்டர்கள் மற்றும் டெல்டா பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
