விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஜெகதீஸ்வரன் (21), முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சிலர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் மற்றும் பலத்த காயம் அடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.