தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், நாளை (மே 10) பிற்பகல் சரியாக 3:15 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்துத் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், இப்போது பதவியேற்பு விழாவிற்கான நேரம் மற்றும் இடம் அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளதால் தவெக தொண்டர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

நேரு விளையாட்டு அரங்கம் முழுவதுமாகத் தொண்டர்கள் வெள்ளத்தில் மூழ்கப் போகும் நிலையில், திரையுலக நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் இந்த வரலாற்று நிகழ்வைக் காணத் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் புதிய விடியலை நோக்கி அடியெடுத்து வைக்கும் விஜய்யின் இந்தப் பயணம், ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் ஒரு பெரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.