தமிழக அரசியல் களத்தில் “க்ளைமாக்ஸ்” காட்சி அரங்கேறிவிட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று ஆளுநரை நேரில் சந்தித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆளுநரிடம் ஆதரவு கடிதங்களை வழங்கும் அந்தப் புகைப்படங்கள், தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி அமையப்போவதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளன.

மெஜாரிட்டிக்கான 118 எம்.எல்.ஏ-க்களின் பலத்துடன், புன்னகை பூத்த முகத்துடன் விஜய் ஆளுநரைச் சந்தித்த அந்தத் தருணம், அவரது தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், நாளை நடக்கவிருக்கும் பதவியேற்பு விழாவிற்கு ஒட்டுமொத்த தமிழகமும் இப்போதே தயாராகிவிட்டது.