தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் நாளை அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மிக முக்கியமான விழாவில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், தற்போது அமைச்சரவை குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளதால் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அந்த 10 அதிர்ஷ்டசாலிகள் யார், எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

நாளை கோட்டையில் அரங்கேறப் போகும் இந்த வரலாற்றுத் தருணத்தைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.