நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாகவும் புதிய பாஸ்போர்ட் வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். அதாவது வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனதாகவும் தொடர்ந்து தேடியும் கிடைக்காததால் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் அவர் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி பாஸ்போர்ட் வழங்க மறுத்ததால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதோடு கிட்டத்தட்ட 12 வருடங்களாக தனக்கு பாஸ்போர்ட் வழங்காமல் தன்னுடைய விண்ணப்பத்தை அவர் நிராகரித்து வருவதாகவும் சீமான் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக தான் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வழக்குகளை இதில் ஈடுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம் எனவும் அவர் கேட்டிருந்தார்.

அதோடு தனக்கு பாஸ்போர்ட் வழங்க மண்டல அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட வேண்டும் என கூறிய நிலையில் இந்த மனு என்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களில் சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மண்டல அதிகாரிக்கு சீமானுக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு வழங்கியுள்ளார்.