தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவே சில வருடங்களாக தகவல்கள் வெளிவந்தது. இருப்பினும் இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இது தற்போது கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
