அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆக்ரோஷமான குணத்திற்கும், அதிரடி பேச்சுகளுக்கும் உலகப் புகழ்பெற்றவர். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த நேர்காணல் ஒன்றில் அவரது கோபம் மீண்டும் வெளிப்பட்டு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரடி ஒளிபரப்பின் போது பிரபல பெண் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட அதிரடியான கேள்வியால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப், கேமரா முன்னாலேயே அந்த பெண் ஆங்கரை “அயோக்கியர்” என்றும் “முட்டாள்” என்றும் திட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி, தனது சட்டையில் குத்தப்பட்டிருந்த மைக்ரோபோனை ஆத்திரத்துடன் கழற்றி எறிந்துவிட்டு, நேர்காணலை பாதியிலேயே புறக்கணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் உலகளவில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.
Oh Wow.
Trump ended an interview with NBC’s Kristen Welker mid-conversation in Wisconsin, calling her a liar to her face before walking off.
Trump: “The elections are like a 3rd world country. You’re Crooked…let’s call it Quits . I’ve had enough.”
Welker asked him to stay,… pic.twitter.com/AqDmpCkXm6
— Open Source Intel (@Osint613) June 7, 2026
கலிபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட தாமதத்தை சுட்டிக்காட்டி, அமெரிக்கத் தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நேர்காணலின் போது அந்த பெண் பத்திரிகையாளர், “நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?” என்று டிரம்ப்பிடம் நேரடிக் கேள்வி எழுப்பினார். ஆதாரம் கேட்ட அடுத்த நொடியே டிரம்பின் ரத்தக் கொதிப்பு உச்சிக்கு ஏறியது. “தேர்தல் நடத்துவதில் அமெரிக்காவின் நிலைமை ஏதோ ஒரு மூன்றாம்தர நாட்டைப் போல கேவலமாகிவிட்டது” என்று கத்திய டிரம்ப், “நீ ஒன்னு சுத்த அயோக்கியனா இருக்கணும், இல்லைன்னா முட்டாளா இருக்கணும்! இதோட முடிச்சுக்கலாம், என் பொறுமைக்கு எல்லை இருக்கு” என்று எகிறினார்.
அந்த பெண் ஆங்கர் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காத டிரம்ப், “உங்கள மாதிரி அயோக்கிய மீடியாவை வச்சுக்கிட்டு எந்த நாடும் வல்லரசாக முடியாது, போய் பத்திரிகைத் தொழிலை உருப்படியா செய்யப் பாருங்க” என்று வெளுத்து வாங்கிவிட்டு வெளியேறினார். மேலும் இதேபோன்ற 2020-லும் இதேபோல ஒரு பிரபல நிகழ்ச்சியில் இருந்து டிரம்ப் பாதியிலேயே மைக்ரோபோனைக் கழற்றி எறிந்துவிட்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.
