“பிலிப்பைன்ஸில்  அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று ( திங்கள்கிழமை) காலை வழக்கம் போல் கொடியேற்ற நிகழ்வு நடந்துகொண்டிருந்த போது, திடீரென நேரிட்ட 7.8 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் ஒட்டுமொத்தப் பள்ளியையும் உலுக்கியெடுத்துள்ளது.

இப்பள்ளியில், ஆசிரியர்களும் பிஞ்சு மாணவர்களும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்த அதே நொடிக் பொழுதில் பூமி பயங்கரமாகக் குலுங்கியதால் அனைவரும் மரண பயத்தில் உறைந்தனர்.

நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் மாணவர்களின் பின்னால் இருந்த ஒரு சிறிய கட்டடம் கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமாகி வெடிச் சிதறியது; இந்த பதைபதைக்கும் நேரடி வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிரவைத்துள்ளன.

“>

 

அதிர்ஷ்டவசமாக, இந்த மிக மோசமான விபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பதை பள்ளி நிர்வாகமும் கல்வித்துறையும் (DepEd) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதால் ஒட்டுமொத்த நாடும் பெரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.”