தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவாகரத்து வழக்கானது 73/2026 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும், சங்கீதா தனது குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருவதாகவும் செய்திகள் உலவின.
இந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1999-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் வேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்தத் திருப்பம் குறித்து விஜய் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
