தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ள நிலையில் கேவகஎன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை வெளியாவதாக இருந்த நிலையில் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் நாளை ரிலீஸ் ஆகாது என பட குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பட குழு வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்த வழக்கில் புதிய குழு அமைத்து ஜனநாயகன் படத்தை பார்த்த பிறகு சான்றிதழ் வழங்கப்படும் என சென்சார் போர்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலையில் தற்போது நாளை காலை 10:30 மணியளவில் ஜனநாயகம் படம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
