தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் எச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சென்சார் சான்றிதழ் வழங்காததால் இன்னும் படம் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகையின் போது படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
இருப்பினும் இதனை எதிர்த்து படகுழு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தனி நீதிபதி உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் சென்னை தலைமை நீதிபதிகள் சென்சார் குழுவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் படக்குழு இப்படி அவசரப்படுவது சரியல்ல எனவும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தார்.
மேலும் இந்த நிலையில் தற்போது படக்குழு படத்தை சென்சார் வாரியத்தின் மறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளதால் தற்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. மேலும் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் பட குழுவின் முடிவை ஏற்று இந்த வழக்கை நீதிபதி பி.டி ஆஷா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் பட குழு விரைவில் புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
