நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பை அடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை பெங்களூருவில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தனது சகோதரர் சீரியஸாக இருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டதும், அவரைச் சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருக்கு விரைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. சத்யநாராயணா, ரஜினிகாந்தின் சினிமா கரியரில் அவரை வழிநடத்தி, துணையாக இருந்த முக்கியமான நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
