சமீபத்தில் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து நடிகர் அஜித் குமார் தெரிவித்த கருத்துகள், சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவும், அதே நேரத்தில் கூட்டம் கூடுவதைக் கண்டித்ததால் அவருக்கு எதிராகவும் இருவேறு விதமாகக் கட்டமைக்கப்பட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வந்தன. இந்தச் சூழ்நிலையில், தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் ஒரு முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய அஜித், “சிலர் எனது பேட்டியை விஜய்க்கு எதிராகக் கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள். இது போன்ற நபர்களைக் குறித்து நான் அமைதியாக இருப்பதுதான் நல்லது” என்று தெரிவித்துள்ளார். மேலும், கரூர் விவகாரம் தொடர்பாக தான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும், இந்தச் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் காரணமல்ல, நாமும் பொறுப்பு என்றும் கூறிய அவர், விஜய்க்கு தான் எப்போதும் நல்லதைத் தான் நினைத்திருக்கிறேன் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், இரு முன்னணி நடிகர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயன்றவர்களின் முயற்சிக்கு அஜித் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.