கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரடியாக வருகிற அக்டோபர் 17ஆம் தேதி சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, தவெக தரப்பில் போலீஸ் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதால், நிகழ்வில் எந்தவித அசௌகரியங்களும் ஏற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் வெளியையாரும் இதில் பங்கேற்க முடியாது எனவும் தவெக தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த சந்திப்பை நேர்மையான மக்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காத வகையில் அமைக்க விரும்பும் விஜயின் முடிவு, அவரது பொறுப்புணர்வை பிரதிபலிக்கிறது என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது
