கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்புவோருக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு மற்றும் தவறான தகவல்களை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பொறுப்பற்ற பதிவுகள் தொடர்வதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
