அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதன்போது நடைபெற்ற சில பொதுக் கூட்டங்களில், தவெக தொண்டர்கள் தங்களது கட்சி கொடியுடன் பங்கேற்றது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக மற்றும் சில எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து, அதிமுக-தவெக இடையிலான உறவை குறித்து கேள்விகள் எழுப்பினர்.
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் எங்கள் கூட்டங்களுக்கு தங்களது விருப்பத்தின்படி வந்து ஆதரவு அளிக்கின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எதிர்க்கட்சிகள் இதனைத் தாங்க முடியாமல் விமர்சனை செய்து வருகின்றன என்றும் அவர் கூறினார்
