தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு தற்போது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். முதல்முறையாக திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து சனிக்கிழமைகள் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த விஜய் அடுத்து நாமக்கல் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.
அவர் செல்லும் வழி நெடுகிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் வாகனத்தை நிறுத்தி அத்துமீறுகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜயின் வாகனங்களோடு சென்ற அவரது பவுன்சர்கள் வாகனம் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் வாகனங்கள் மட்டும் சேதமடைந்த நிலையில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் விஜயுடன் சென்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
