தமிழக அரசியல் களத்தில் புதிதாக ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நுட்பமான முயற்சி மேற்கொண்டுள்ளார்.

“தினகரனை BJP தலைவர்கள் சந்திப்பது தவறில்லை; இது நல்லதுதான். விரைவில் ஒரு நல்ல முடிவு வெளிவரும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம். தேவைப்பட்டால் நானே டிடிவி தினகரனை நேரில் சந்திக்கத் தயார்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் சந்தித்து சுருக்கமாக ஆலோசனை நடத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் அளித்த இந்த அரசியல் வரவேற்பு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

தேர்தல் முன்னணிக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜகவின் இந்தப் சமாதான  போக்கு எதிர்கால தமிழக அரசியலில் புதிய திருப்பம்  உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.