தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் ஆளுநர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி காங்கிரசுக்கு தற்போது தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இரண்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதியாகிவிட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கிறார்கள்.
இதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சம்மதம் தெரிவித்துவிட்டதாக பேசி வேணுகோபால் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 59 வருடங்களுக்குப் பிறகு அமைச்சரவையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாளை அவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருப்பதாகவும் நெகிழ்ச்சியோடு கேசி வேணுகோபால் பதிவிட்டுள்ளார்.
