தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வருகிறது. இன்னும் பத்து தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்ததால் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகள் ஆன இந்திய முஸ்லிம் லீக் கட்சியை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ் ஆதரவு கேட்டார். ஆனால் அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் திமுக தலைவர் சொன்னால் மட்டுமே ஆதரவு தரமுடியும் இல்லை எனில் ஆதரவு கொடுக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடமும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கேட்ட நிலையில் அவர்கள் அவசரமாக கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை எங்களுடைய முடிவை ஒன்றாக அறிவிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.