தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் ஒரு பக்கம் எகிறிக் கொண்டிருக்க, இன்று (மே 7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உற்று நோக்க வைத்துள்ளது.

தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் காங்கிரஸின் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு இந்தக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், “தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களது லட்சியம்” என அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக, தற்போதைய குழப்பமான அரசியல் சூழலைக் கையாண்டு, உடனடியாக எந்த முடிவையும் எடுக்கும் முழு அதிகாரத்தை ஸ்டாலினுக்கு வழங்கி திமுக எம்.எல்.ஏ-க்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதால், “அடுத்த மூவ் என்ன?” என்ற எதிர்பார்ப்பில் அறிவாலயம் பரபரப்பாகிக் கிடக்கிறது.