தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் ஒன்பது அமைச்சர்கள் மட்டுமே இதுவரையில் பொறுப்பேற்றுள்ளனர். மீதமுள்ள அமைச்சர்கள் எனும் நியமிக்கப்படாமல் இருக்கும் நிலையில் அது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் கழகத்திற்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டு கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக திருமாவளவன் அறிவித்துள்ள நிலையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தரப்படாது என தனக்கு ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் உறுதி கொடுத்து விட்டதாக கூறினார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது எனவும் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் அதிமுகவுக்கு அமைச்சரவை பதவி கொடுக்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது திருமாவளவன் கூறிய தகவல் புதிய வியூகத்தை கிளப்பியுள்ளது.

அதாவது அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சரவையில் இடம் கொடுக்கும் முடிவிலிருந்து தமிழக வெற்றிக்கழகம் பின்வாங்கியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்

மேலும் இது சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.