தமிழகத்தில் இனி அரசு பங்கேற்கும் அனைத்துத் திருவிழாக்களிலும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கலைத்துறையை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கலந்துகொள்ளும் அனைத்து அரசு மற்றும் பொது விழாக்களிலும், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்கவும், கிராமப்புறக் கலைஞர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் இந்த முன்னெடுப்பு பேருதவியாக இருக்கும் என்று பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்…” 🌾என்ற ஒற்றைக் குரலுக்கு செவிசாய்த்த உன்னதத் தலைமை! 👑 @TVKVijayHQ
இனி முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ‘நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்’ அரங்கேறும் என உடனடி… pic.twitter.com/UHu3zpQ4Uz
— மித்திரன் சதீஸ் (@SATISH122104) August 19, 2026
“>
தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், கலைஞர்களுக்குத் தொடர்ந்து மேடை வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையிலும் அரசால் எடுக்கப்பட்டுள்ள இந்தச் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கலைஞர்களின் கோரிக்கைக்குச் செவிமடுத்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, தமிழகக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
